பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளை கைப்பற்றி, பாஜக தனி பெரும் பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள‌து. பெங்களூரு மாநகராட்சியை மீண்டும் பாஜக தக்கவைத்து கொண்டதால் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம், அதிமுக, சுயேட்சைகள் என 1,120 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடந்த 22-ம் தேதி அமைதியான முறையில் வாக்குபதிவு முடிந்தது. கடந்த 2010-ம் ஆண்டை போலவே, இந்த தேர்தலிலும் இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம்காட்டாத தால், 44 சதவீத‌ வாக்குகள் மட்டுமே பதிவாகின. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், நேற்றுகாலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கபட்டது. தொடக்கம் முதலே காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளபட்டு, பாஜக முன்னிலை வகித்தது. இதனால் பாஜக அலுவலகத்தின் முன்பாக குவிந்த பாஜக தொண்டர்கள் பட்டாசுகள்வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சில வார்டுகளை தவிர, அனைத்து வார்டுகளிலும் மிகவும் பின்தங்கி இருந்தது.

இறுதியாக பாஜக 100, காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14, இதரகட்சிகள் 4 மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளில் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸை வீழ்த்தி, பாஜக மீண்டும் பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்றி இருப்ப‌ தால் அக்கட்சியின் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசும்போது, ''பாஜக தனி பெரும்பான்மை வெற்றிபெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. களத்தில் அயராது உழைத்த பாஜக தலைவர்கள் உற்சாகம் அடைந் துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் மீது உள்ள கோபத்தின் காரணமாகவே மக்கள் இந்தமுடிவை அளித்திருக்கிறார்கள்'' என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக கூறுகையில்,'' மத்திய பிரதேசம், ராஜஸ்தான் வெற்றியை தொடர்ந்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தலிலும் வெற்றிப்பெற்று பாஜக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி யுள்ளது. வளர்ச்சியையும், நல்ல நிர்வாகத்தையும் மேற்கொள்ளும் சிறந்த அரசியலுக்கு கிடைத்தவெற்றி இது''என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.