சென்னை துறைமுக வளர்ச்சிக்கு உதவும் மதுர வாயல் மேம்பால சாலைதிட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ் சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை, 19 கி.மீ தொலைவுக்கு ரூ.1,816 கோடி செலவில் மேம்பால சாலை அமைக்க திமுக ஆட்சியில் திட்டமிடபட்டது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை அழைத்து அந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 20 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

சாலை பணிகளால் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், கூவத்தில் துாண்கள் அமைக்கப் படுவதாக கூறி, 2012 மார்ச் 29ல், தமிழக அரசு தடைவிதித்தது. அடுத்த நாள் முதல் பணிகள் முடங்கின. அப்போதைய பிரதமரின் ஆலோசகர், நெடுஞ் சாலை ஆணைய அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்தடுத்துவந்து, முதல்வர் மற்றும் தலைமைச் செயலரை சந்தித்து, சாலைபணியை தொடர, பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை.

இதுதொடர்பான வழக்கில், 'தடையின்றி பணிகளை தொடரலாம்; மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்காத மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஓராண்டுக்கு மேலாக விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் "துறை முகத்துக்கு வரும் சரக்கு வாகனங்களுக்கு மதுரவாயல் மேம்பால திட்டம் மிகுந்த பலனளிக்ககூடியது. எனவே, அந்தசாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இந்தவிஷயத்தில் கோர்ட்டுக்கு வெளியே தீர்வுகாண மத்திய அரசு விரும்புகிறது" என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.