அகில இந்திய வானொலி நிலையத்தால் பதிவுசெய்யப்பட்ட 'ராமசரித மானஸ்' என்ற காவியத்தின் ஒலிவடிவ சிடி தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வெளியிட்டார்.

இதுகுறித்து மோடி கூறியதாவது:

கோஸ்வாமி துளசி தாசர் சமஸ்கிருத மொழியில் எழுதிய ராமசரித மானஸ் மிகச்சிறந்த காவியம். இது இந்திய கலாச்சாரத்தின் சாராம் சங்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் இந்தியர்கள் மொரீஷியஸ் உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்தனர், அவர்கள் இந்தியாவுடன் எப்படி தொடர்பு வைத்திரு ந்தனர் என்பதை ராமசரிதமானஸ் விளக்குகிறது.

கடந்த 1980-ம் ஆண்டு முதல் அகில இந்தியவானொலி நிலையத்தின் மூலம் ராமசரிதமானஸ் காவியம் பல்வேறு புகழ்பெற்ற போபால் 'கரானா' பாடகர்களால் பாடப் பட்டுள்ளன. வானொலி நிலையத்தால் பதிவுசெய்யப்பட்ட இந்த காவியம் இப்போது ஒலிவடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.

நாட்டு மக்களை ஒருங்கிணைப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அகில இந்தியவானொலி நிலையமும் ஆகாஷ்வானியும் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுகுரியது.

குறிப்பாக, வானொலி நிலையங்கள் நாடுமுழுவதும் பல்வேறு கலைஞர்களின் 9 லட்சம் மணி நேர உரையை பதிவு செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். இது விலை மதிப்பில்லா தொகுப்பு ஆகும்.

நமது நாட்டில் சித்தாந்தத்தின் அடிப்படையில் பல ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இன்றைய தினம் யாராவது ஓம் என்று உ்சரித்தால் கூட உடனே சர்ச்சைகள் ஏற்படுகின்றன.

எப்படி ஓம் என உச்சரிக்கலாம் என சர்ச்சை கிளம்பிவிடுகின்றது . ஆனால், நமது நாட்டில் ராம் சரித்மானஸ் குறித்து மட்டும் யாரும் இதுவரை கேள்வி எழுப்பியதில்லை, இனி யாரேனும் இது குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் .

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நமது நாட்டில் உள்ள குடும்ப அமைப்பு உலகில் பலரை பொறாமையடைய செய்துள்ளது, இந்த குடும்ப வாழ்க்கை முறைக்கு ராமசரித் மானஸ் முக்கியப் பங்காற்றியுள்ளது, குடும்ப வாழ்க்கைக்கான மிளிரும் உதாரணமாக ராமர் திகழ்கிறார்  இவ்வாறு மோடி தெரிவித்தார்.

Leave a Reply