மரண தண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டும் , அதேநேரத்தில் பயங்கரவாதம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மட்டும் தூக்கிலிடலாம் என்றும் சட்ட ஆணையம் பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை தொடர்பாக ஆய்ந்து முடிவு அறிவிக்க சட்டக் கமிஷன் குழு ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக நீதிபதி ஏ.பி., ஷா தலமையிலான குழுவினர் சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அறிக்கை தாக்கல்செய்தனர்.

இந்த அறிக்கை தொடர்பாக ஏ.பி., ஷா நிருபர்களிடம் பேசுகையில்; நாங்கள் தாக்கல்செய்துள்ள அறிக்கையில் , சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி எங்களின் பரிந்துரைகளை சமர்ப்பித் துள்ளோம். தூக்கு தண்டனையை ரத்து செய்ய இது சரியான தருணம். இனியும் காலம் தாமதிக்க கூடாது. அதே நேரத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர் களுக்கான மரணத்தண்டனை ரத்துசெய்ய முடியாது.

தேசவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவருக்கும் மரண தண்டனை வழங்கலாம். இவர்களுக்கு அப்பாற்பட்டு பிறகுற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு , மரணத் தண்டனை தேவையற்றது என்று பரிந்துரைத் துள்ளோம். இவ்வாறு ஏ.பி.ஷா கூறினார்.

Leave a Reply