இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தபோட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் தொடரைவென்று வரலாற்று சாதனையை படைத்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:- இலங்கைக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவுசெய்த இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் அருமையான ஆட்டம் நமக்கு பெருமை தருவதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply