இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்க, டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் அனைத்துலக இந்து – பௌத்த மாநாடு வியாழக் கிழமை தொடங்கி வரும் 5ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார். இந்த மாநாட்டில் மொங்கோலியா, இலங்கை, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்க இதில் பங்கேற்க உள்ளார். அப்போது அவர் நரேந்திர மோடியை சந்தித்துபேசுவார் என்று கூறப்படுகிறது.

Tags:

Leave a Reply