போபாலில் இம்மாதம் 10-ம் தேதி நடைபெறும் உலக இந்திமாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளார்.

1975 ம் ஆண்டு முதல், இந்தி மாநாடு நடை பெற்று வருகிறது. 2012 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ் பெர்க்கில் 9-ம் ஆண்டு உலக இந்திமாநாடு நடைபெற்றது.

அப்போது 10 ஆவது மாநாட்டை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 10-வது உலக இந்திமாநாடு மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

நோக்கமும் விரிவாக்கமும் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தமாநாட்டை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், மத்திய பிரதேச அரசு ஆகியவை இணைந்து நடத்த உள்ளன

Leave a Reply