ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாணவி விசாலினியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் கலந்துரையாடுகிறார். அப்போது இந்தியா முழுவதிலுமிருந்து 10 மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மாநிலங்களில் இருந்து சிறந்து விளங்கும் மாணவர்களுடனும் கலந்துரையாடுகிறார்.

அதன் படி தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவி விஷாலினியுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலமாக உரையாட உள்ளார். அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அறிவியல் துறைகளில் பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த விஷாலினி ஒன்பதாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வருகிறார்.

Tags:

Leave a Reply