அமெரிக்க – இந்தியர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 27ம் தேதி பிரதமர் மோடிக்கு அளிக்கப்படவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு 45,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதற்குமுன் நியூயார்க் சதுக்கத்தில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் முன்பதிவு செய்து கலந்துகொண்டனர்.

இதேபோன்று துபாயில் அண்மையில் பிரதமர் மோடி உரையை கேட்க 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து காத்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் சிலிகான் வேலியில் அமெரிக்க – இந்தியர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்கு 45,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

சான்ஜோஸ் நகரத்தில் உள்ள எஸ்ஏபி மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமரின் உரையை நேரடியாகக் கேட்கும்வாய்ப்பைப் பெறவிருக்கும் 18,500 பேர் கொண்ட பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்து வரும் மேற்கு கடலோர அமெரிக்க -இந்தியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply