ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி உடன், காணொலி காட்சி வாயிலாக, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பி.டெக் மாணவி விசாலினி உரையாடினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசியதகவல் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த காணொலிகாட்சி மூலம் இந்த உரையாடல் நடைபெற்றது. மாணவியுடன் விஜய நாராயணம் கேந்திர வித்யாலயா மாணவிகள் 10 பேர் கலந்துகொண்டனர். தேசத்திற்கு எந்தவழியில் சேவையாற்றலாம் என்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் மாணவி விசாலினி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில்அளித்த பிரதமர் மோடி, மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்துவது, உணவினை வீணாக்காமல் இருப்பது உள்ளிட்டவை நாட்டிற்கு சேவைசெய்வது போல் ஆகும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியிடம் காணொலி காட்சி வாயிலாக கேள்வி எழுப்பிய மாணவி விசாலினிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன. இந்தியாவிற்கு நோபல்பரிசு பெற்றுத்தர வேண்டும் என்றும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே வாழ்வின் லட்சியம் என்றும் மாணவி விசாலினி தெரிவித்துள்ளார்.

Leave a Reply