ராணுவ வீரர்களுக்கு 'ஒருபதவி, ஒரு ஓய்வூதியம்' திட்டம் விரைவில் அமல்படுத்தபடும் என பாஜக தலைவர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

முன்னாள் ராணுவத்தினரின் நீண்டகால கோரிக்கையான, 'ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. ஆனால் சில காரணங்களால் இந்த திட்டம் இன்னும் அமல்படுத்தப்பட வில்லை. ஆனால் இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் ராணுவவீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் கடும்போராட்டத்தை தொடர்வோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில், ராணுவ வீரர்களுக்கு 'ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்' திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் அமித்ஷா உறுதி அளித்துஉள்ளார். பாஜனதா – ஆர்.எஸ்.எஸ். மூன்றுநாள் ஒருங்கிணந்த கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்றது. தலைவர்கள் கூட்டத்தில் 'ஒருபதவி, ஒரு ஓய்வூதியம்' திட்டமும் முக்கிய அங்கம்வகித்தது. சங்பரிவார் செய்தி தொடர்பாளர் மன்மோகன் வைத்யா செய்தியாளர்களிடம் கூறுகையில் , இது விரையில் செய்யப்படும் என்று பாஜக தலைவரின் கருத்தும் உள்ளது என்று கூறியுள்ளார்.

வைத்யா பேசுகையில் " ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்' திட்டம் விரைவில் அமல்படுத்தபடும் என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறி உள்ளார்," என்று கூறியுள்ளார்.

Leave a Reply