"ஓர் ஆசிரியராக பணியாற்றுவது மற்ற பணிகளை செய்வது போன்றதல்ல. ஆசிரியர் பணி மிகவும் வித்தியாசமானது. அடுத்த தலைமுறையை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்" .

"ஓர் ஆசிரியர் எப்போதும் ஓய்வு பெறுவதில்லை. மாணவர்களின் எதிர்காலைத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய பொறுப்பை தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு பணியாற்றுகிறார்.

அன்னை நம்மை பெற்றெடுக்கிறார் ஆனால் ஆசிரியரே நமக்கு வாழ்வளிக்கிறார். ஒரு டாக்டர் அரிய சாதனை செய்தாள் அவரைப் பற்றி அனைத்து ஊடகங்களும் பேசுகின்றன. ஆனால், அந்த டாக்டரின் வெற்றிக்குப் பின்னாள் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானியின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆசிரியர் இருக்கிறார்" .

ஆசிரியர் தின விழாவின் போது, பள்ளிச் சிறார்களுடன் ஏன் உரையாடுகிறார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஏன் என்றால், பள்ளிச் சிறார்கள்தான், ஆசிரியர்களின் அடையாளம். எனவேதான், ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுடன் உரையாடுகிறேன்" .

, "துரதிருஷ்டவசமாக அரசியல் அவப் பெயரை சம்பாதித்துவிட்டது, திறமை மிக்க நபர்கள், அரசியலுக்கு வந்து, அந்த அவப்பெயரை மாற்ற வேண்டும்"

"நாட்டுக்கு சேவை ஆற்றுவது என்றால் அரசியல் தலைவராகவோ, முக்கிய நபராகவோ ஆகவேண்டிய அவசியம் இல்லை.

மாணவ, மாணவிகள் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாகக் கூட நாட்டுக்கு சேவையாற்றலாம். நீங்கள் உங்கள் வீட்டில் தேவை இல்லாமல் மின்சாரம் இயங்குவதை நிறுத்தினாலே நாட்டுக்கு ஆற்றும் சேவைதான். ஸ்கூட்டரில் செல்லும்போது போன் வந்தால் வாகனத்தை நிறுத்தி விட்டு பேசினால் எரிபொருள் மிச்சமாகும். கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு கற்றுக் கொடுப்பது மிகப்பெரிய சேவை. இது போன்ற சிறிய செயல்களை செய்வதன் மூலமாகவே கூட நாட்டுக்கு சேவை ஆற்ற முடியும்''

எனக்கென பிரத்யோக ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பது வெறும் வதந்தி. நான் எளிமையான ஆடைகளையே அணிகிறேன். நான் சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்தவன். குஜராத் தட்பவெட்ப நிலை குளிராக இருக்காது. அதனால், குர்தா- பைஜாமா அணிகிறேன். எனது துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன். முழுக்கை குர்தாவாக இருந்தால் நேரம் அதிகம் பிடிக்கும். இதனால் அரைக்கை குர்தா அணிகிறேன்.

வளரும் காலங்களில் என் ஆடையை இஸ்திரிக்கு கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இருந்ததில்லை. இதனால் லோட்டாவில் கரித்துண்டுகளை இட்டு நானே இஸ்திரி போட்டுக்கொள்வேன். பள்ளி நாட்களில் வகுப்புகள் முடிந்த பிறகு சாக்பீஸ்களைத் திரட்டி எடுத்துக்கொண்டு எனது வெள்ளை ஷூவுக்கு பாலீஷ் போடுவேன். இவ்வளவு தான் நான் செய்தது. எனக்கு ஆடை வடிவமைப்பாளர் கிடையாது. ஆனால், நிகழ்ச்சிக்கேற்றவாறு நாம் உடையணிவது அவசியம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாடியபோது பேசியது

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.