முன்னாள் ராணுவத்தினருக்கு, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' வழங்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஆனாலும், சிலர், வி.ஆர்.எஸ்., எனப்படும், தானாக முன்வந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, இந்ததிட்டம் பொருந்தாது என, பீதியை கிளப்பி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கும், ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் பொருந்தும்,''

முன்னாள் ராணுவத் தினருக்கு, நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளோம். அதனால் எத்தகைய நிதிச்சிக்கல்கள் ஏற்படும் என்பதை, இப்போது கணிக்க முடியவில்லை; இருந்தாலும், அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது என்பதில் உறுதியாக உள்ளோம்.

இந்நிலையில், தானாக முன் வந்து ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஒரே பதவி; ஒரே ஓய்வூதிய திட்டம் பொருந்தாது என்று , வதந்தியை சிலர் கிளப்பி விட்டுள்ளனர். இதனால், முன்னாள் ராணுவத்தினர் பீதியடைந்து உள்ளனர்.அவர்கள், பீதியடைய தேவையில்லை; முன்னாள் ராணுவத்தினர் அனைவருக்கும், இந்ததிட்டம் பொருந்தும். 15 – 17 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்றினாலும், காயமடைந்து வெளியேறியிருந்தாலும், அவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

அது போல, ராணுவத்தினர் சம்பளம் தொடர்பாக, கமிஷன் அமைப்பது என்றும் முடிவாகி உள்ளது; அதையும் தவறாக சித்தரித்துள்ளனர். கமிஷன் நிர்ணயிக்கும் சம்பளம்தான், இனி கிடைக்கும் என, வீரர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளனர். அதுவும் தவறு; அமைக்கப்பட உள்ளது, சம்பளக் கமிஷன் போன்றதல்ல; ராணுவத்தினரின் குறைகளை களைய அமைக்கப்படும் கமிஷன் அது.

டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கமாக, அரியானாவின், பதார்பூர் – பரிதாபாத் வழித்தட சேவையை துவக்கி, பிரதமர் மோடி பேசியது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.