விண்வெளித் துறை சார்பில் ஒருநாள் தேசியமாநாடு தில்லியில் நடக்கிறது. ஆட்சி மற்றும் வளர்ச்சியில் விண்வெளி தொழில் நுட்ப மற்றும் செயலிகளின் (அப்ளிகேஷன்ஸ்) பயன் பாடு குறித்து ஆய்வுசெய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், மத்திய, மாநில அமைச்சர்கள் மத்திய அமைச்சக செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

நாடுமுழுவதிலும் இருந்து 1,500 பிரதிநிதி குழுக்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டை நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பங்காரியா, மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.

Tags:

Leave a Reply