இந்திய பங்குசந்தையில் சமீப காலமாக அதிக அளவில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டுவருகிறது. இதனால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நேற்று பங்கு சந்தை சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளாக குறைந்தது.

கடந்த 14 மாதத்துக்கு பிறகு பங்குசந்தை புள்ளி இந்த அளவுக்கு குறைந்து இருக்கிறது. இதனால் பொருளாதாரத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இதனால் உருவாகியுள்ள பொருளாதார நிலைமைகள் பற்றி ஆராய பிரதமர் நரேந்திர மோடி தொழில் அதிபர்கள் மற்றும் வல்லுனர்கள் ஆலோசனை கூட்டத்தை டெல்லியில் நடத்தினார்.

இதில் கேபினட் மந்திரி கள், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நிதிஅயோக் துணை தலைவர் அரவிந்த் பனகரியா மற்றும் இந்திய முன்னணி தொழில் அதிபர்கள் சுனில்மித்தல், சசிரூயா, அனில் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்ட 27 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை, அதனால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதை எதிர்கொள்ள வேண்டியது எப்படி என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது.

Leave a Reply