தற்போது இந்தியாவில் பிரதமராக இருப்பது நரேந்திரமோடி, மன்மோகன்சிங் இல்லை இதனால் பகிஸ்தான் அஞ்சுகிறது என்று பாகிஸ்தானில் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் பாக்கிஸ்தானை அச்சுறுத்தி பேசியது நினைவிருக்கலாம். அவர் பேசிய போது பாகிஸ்தான் இன்னொரு மும்பை தாக்குதலை செய்தால் அவர்கள் பலூசிஸ்தானை இழக்கநேரிடும் என எச்சரித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தொலைக் காட்சி பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் விவாத்தின் போது பங்கேற்பாளரிடம் இன்னொரு மும்பைதக்குதல் நடந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் எனக் கேட்டார். அதற்கு அந்த பங்கேற்பாளார் இன்னொரு மும்பை தாக்குதல் நடந்தால் பாகிஸ்தான் பலூசிஸ்தானை இழக்கநேரிடும் என அஜித்டோவல் கூறியதையே பதிலாக கூறினார்.

அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் மேலும் அஜிதடோவலின் எச்சரிக்கையை நினைவுப்படுத்தி பகிஸ்தான் எந்த நிலமையில் உள்ளது? தற்போது இருப்பது மன்மோகன் இல்லை நரேந்திரமோடி என அஞ்சுகிறதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு, அஜித் டோவல் பாகிஸ்தானை அழிக்க நினைக்கிறார் என பாகிஸ்தான் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

Leave a Reply