மரியாதைக்குரிய நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 17ந் தேதி. இந்த ஆண்டு நம்மை காக்கும் விநாயகரின் சதுர்த்தியும் சேர்ந்து வருவது நம் மோடி அவர்களை விநாயகரே ஆசீர்வதிப்பதைப் போன்றதாகும்.

இந்த நாட்டிற்கு நல்ல பலதந்து கொண்டிருக்கும் பிரதமர் அவர்களின் பிறந்தநாளை பல சேவைகள் செய்யும் விழாவாகக் கொண்டாடுவோம். பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் மாணவ மாணவிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

ஏனென்றால் அவர்களிடம் மோடி அவர்கள் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது பலமுறை பள்ளிக்குழந்தைகளிடம் அவர் நேரடியாக உரையாற்றுகிறார் என்பதை வைத்தே நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பெண்குழந்தையையும் செல்வமகளாகவும், ஒவ்வொரு ஆண் குழந்தையையும் செல்வமகனாகவும் பாவித்து அவர்களுக்கான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதனால் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தன்கையால் செய்த வாழ்த்து அட்டையை, பிரதமரின் சாதனையை விளக்கி 'கமலாலயம்' 19, வைத்தியராமய்யர் தெரு, தி.நகர், சென்னை -17 என்ற முகவரிக்கு செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் வந்தடையும்படி அனுப்ப வேண்டும்.

சிறந்த வாழ்த்து அட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல பரிசுகளும் வழங்கப்படும். மிகச்சிறந்த அட்டைகள் தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சி மூலம் பிரதமருக்கு அனுப்பப்படும். கல்லூரி மாணவ மாணவிகளும் இதில் பங்கெடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் அழகிய வடிவமைப்புடன் வாழ்த்துக்களை அனுப்பலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : wishourpm@gmail.com இந்த இ-மெயில் வாழ்த்துக்களால் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படுவதோடு நம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். பொதுமக்களும் இதில் பங்கேற்கலாம். வாருங்கள் வாழ்த்துவோம் நம் பிரதமரை.

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாநிலத்தலைவர், தமிழக பா.ஜ.க.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.