வரும் நாட்களில் டிஜிட்டல் உலகை ஆங்கிலம், சீனம், இந்தி ஆகிய மொழிகள் தான் ஆட்சி செய்யப் போகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

போபாலில் நடைபெறும் 10 வது உலக இந்திமாநாடு அங்குள்ள லால்பரேடு மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை துவங்கிவைத்து பெசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:- வரும் நாட்களில் ஆங்கிலம், சீனம், மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகள் தான் டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் செலுத்த உள்ளன. மொழிச் சந்தைகளின் பயன்பாடு பெரியளவில் இருக்க போகின்றன. நாம் இந்தி மொழியை மறந்து போனால், அது நாட்டுக்கு ஏற்படும் மிகப்பெரிய இழப்பாக அமையபோகிறது. எனது தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும், இந்திமொழி தெரியாமல் இருந்திருந்தால் எனக்கு என்னவாயிருக்கும் என்பதை நான் சிந்தித்து பார்க்கிறேன்.

எந்த ஒருமொழியையும் தெரிந்து கொள்வதின் பலத்தை நான் தெளிவாக அறிந்துள்ளேன். அதேவேளையில், இந்தி மொழியை ஊக்குவிப்பதில் மட்டும் கவனம்செலுத்த கூடாது. பிற அருகிவரும் மொழிகளை ஊக்குவிபத்திலும் கவனம்செலுத்த வேண்டும். மொழி அறிஞர்களின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ளவில்லையென்றால், இந்தமொழிகள் வரலாற்றுக்கு தள்ளப்படும். மொழியே இல்லையென்றால், இலக்கியம் எப்படி இருக்க முடியும். நமது மொழியை பாதுகாக்க நாம் தவறினால், இவைகள் அழிந்துவிடும். வழக்கொழிந்து போன டைனோசரை சினிமாக்களில் பார்த்து அறிந்து கொள்வது போன்ற சூழல் ஏற்படும். இது போன்ற மொழிகளை பாதுகாப்பது ஒவ்வொரு தலமுறையினரின் பொறுப்பு. சாத்தியமானால், அதன் பாரம்பரியத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எழுதப்பட்ட கல்வெட்டை எப்போதாவது கண்டுபிடித்தால், அது என்ன மொழி என்பதை கண்டுபிடிக்க நமது தொல்லியல் துறை பல ஆண்டுகளை செலவிடுகின்றனர்" .

நான் சிறுவயதில் டீ விற்ற காலத்த்தில் , உத்தரபிரதேசத்தில் இருந்து எருமை மாடுகளை வாங்க ரயில் மூலம் குஜராத்திற்கு வரும் வியாபரிகளிடம் டீ விற்கும்போது, இந்தி மொழியை கற்றுக்கொண்டேன்

Leave a Reply