ஈரானில் யூரியா உற்பத்தி தொழிற்ச் சாலை அமைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறுகையில், நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளுக்கு யூரியா மானியம் வழங்கும் வகையில் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 80 ஆயிரம் கோடி செலவாகி வருகிறது.

இதனை குறைக்கும் பொருட்டு ஈரானில் யூரியா உற்பத்தி தொழிற் சாலை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஈரானில் இருந்து குறைந்த விலைக்கு எரிவாயு பெற முயற்சித்து வருகிறோம். கடந்த 2013-ம் ஆண்டு டாலரைவிட மிகக்குறைந்த விலைக்கு அவர்கள் எரி வாயு அளிக்க முன்வந்தனர்.

எனவே நாப்தாவில் இருந்து யூரியா தயாரிக்கும் தொழிற்சாலையை ஈரானில் அமைக்க முயற்சிசெய்து வருகிறோம் என்றார். ஈரானில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டால், யூரியாவின் விலை பாதியாக குறையும். எனவே விவசாயிகளுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் அளிக்க தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply