பாஜக ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை பின்பற்றி சத்தீஸ்கர் மாநிலமும் ஜைன மதத்தின் பண்டிகையை யொட்டி இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்துள்ளது. ஜைன மதத்தினரின் உண்ணா விரத பண்டிகை காலத்தை முன்னிட்டு 4 நாட்கள் முதல் ஒருவார காலத்துக்கு இறைச்சி விற்பனைக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் தடை விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பாஜக. ஆளும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் இதே காரணத்துக்காக இறைச்சி விற்பனை தடை செய்யப் பட்டது. இந்நிலையில் ஆட்சியில் பாஜக. அங்கம்வகிக்கும் ஜம்மு காஷ்மீர மாநிலத்து உயர் நீதிமன்றம் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது.

இந்நிலையில் சத்தீஸ்கரும் ஜைன மதத்தினர் பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்துள்ளது. அம்மாநில முதல்வர் ரமண் சிங் இன்று இதனை அறிவித்துள்ளார்.

Tags:


Leave a Reply