ஆந்திராவில் பாஜக 2019ம்ஆண்டு ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தகூட்டத்தில் மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்

துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணண் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் 2019ம்ஆண்டு பாஜக அமைக்கும் வகையில் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் பாஜக மிகச்சிறந்த வெற்றியை பெறும்.

நலவாழ்வு திட்டங்கள் குறித்து வெறும் அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் நாம் மகிழ்ச்சி அடையக் கூடாது . நாம் இலக்கு நிர்ணயித்த மக்களை அந்த நல்வாழ்வு திட்டங்கள் சென்றடையவேண்டும். நடுத்தர மற்றும் குறுதொழில் நிறுவனங்களை நடத்து பவர்கள் தனியார் கடன் காரர்களிடம் சிக்கி அவதிப் படுகிறார்கள்.பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் அவர்கள் கடன்பெறலாம் என்பது குறித்த அவர்களிடம் நாம் விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இந்ததிட்டம் ஆந்திராவில் இந்த மாதம் 25ம் தேதியன்று துவங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முத்ரா யோஜனா திட்டம் பல லட்சம் நடுத்தரவணிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கான திட்டமாகும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் சித்தார்த் நாத்சிங் தெரிவித்தார்.ஆந்திராவில் பாஜக வலிமைமிக்கதாக உருவெடுக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிகறோம். எனவே எங்களது கூட்டாளி கட்சியான தெலுங்கு தேசம் வலிமை மிக்கதாக ஆக உரிமை உள்ளது. பாஜ க தொண்டர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.