ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஆம்புலன்ஸ் ஊழல்தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின்பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவும் வழக்குபதிவு செய்துள்ளது.

ராஜஸ்தானில் அசோக்கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்தபோது, 108 ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆம்புலன்சில் ஜிபிஎஸ். கருவி பொருத்தப் பட்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனால் மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் செயல்பட்டுவரும் ஜிகித்சா ஹெல்த்கேர் என்ற நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடிந்தது. அந்நிறுவனத்துக்கே டெண்டர் அளிக்கப்பட்டது. இதை யடுத்து 2010ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை 35 மாவட்டங்களில் 450 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டன. இந்த கால கட்டத்தில் அந்நிறுவனம் அதிகப்படியான தொகைக்கு ரசீதுகளை சமர்ப்பித்த தாகவும் மறுப்பேதும் தெரிவிக்காமல் அத்தொகை அரசு தரப்பில் இருந்து கொடுக்கபட்டது என்பதும் புகார்.

இந்த ஊழல் தொடர்பாக 2014ம் ஆண்டு முந்தைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்திடம் புகார் செய்யப்பட்டது. அவர் கணக்குதணிக்கை அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையில் ரசீது சமர்ப்பித்ததில் முறைகேடுகளையும், சேவையில் குறைபாட்டையும் கண்டுபிடித்தது. இதற்குள் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக. அரசு ராஜஸ்தானில் பதவிக்குவந்தது.

ஜெய்ப்பூர் நகர மேயர் பங்கஜ் ஜோஷி அளித்த புகாரின் பேரில், அசோக் கெலாட் உள்ளிட்டோர் மீது ஜெய்ப்பூரில் உள்ள அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கை சிபிஐ. ஏற்று நடத்த வேண்டும் என்று சிபிஐ.க்கு மாநில அரசு கடிதம் எழுதியது.

இதன்படி இந்தவழக்கு விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுக் கொண்டது. இதுதொடர்பாக அசோக் கெலாட் மீதும், ஜிகித்சா ஹெல்த்கேர் நிறுவனம், அதன் டைரக்டர்களாக இருந்ததாக கருதப்படும் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திசிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் கிருஷ்ணா, மற்றொரு டைரக்டர் ஸ்வேதா மங்கள், அப்போதைய மாநில சுகாதார அமைச்சர் துருமிர்சா ஆகியோர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.