வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜைசால்மரில் எல்லைப் பாதுகாப்புபடை வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வந்துள்ள பாபா ராம் தேவ் கூறுகையில், "கருப்புப்பண விவகாரம் என்னால் எழுப்பப்பட்டது. நிச்சயம் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்.

மனிதர்களுக்கு யோகா நல்லகாலத்தை உருவாக்கி, ஆரோக்கியத்தை அளிக்கும், ஆனால் நாட்டுக்கு நல்லகாலம் எப்போது பிறக்கும் என்பது பிரதமர் அல்லது கடவுளுக்கே வெளிச்சம் என்றார்.

Leave a Reply