சிங்கப்பூர் பாராளுமன்றத்துக்கு வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றிவாகை சூடியது. மொத்தமுள்ள 89 தொகுதிகளில் 83 இடங்களை ஆளும்கட்சி கைப்பற்றியுள்ளது.தற்போதைய பிரதமர் லீ லூங் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யபட்டார்.

''பாராளுமன்ற தேர்தல்வெற்றி, சிங்கப்பூரின் எதிர்காலம் மீது நம்பிக்கை அளித்து இருக்கிறது'' என பிரதமர் லீ பெருமிதத்துடன் கூறினார்.

சிங்கப்பூர் பிரதமர் லீயின் தேர்தல்வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

கூறியிருப்பதாவது:

''இந்தியா, சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு லீயுடன் இணைந்து பாடுபட ஆவலுடன் காத்து இருக்கிறேன்'' என கூறி உள்ளார்.

Leave a Reply