செப்டம்பர் 27 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முகநூல் (பேஸ்புக்) தலைமை யகத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட உள்ளார்.

இது குறித்து முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் கூறுகையில், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு நான் சென்றிருந்த போது பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது பேஸ்புக் தலைமை செயல் அலுவலகத்துக்கு பிரதமர் வருகைதர இருக்கிறார் என்கிற அறிவிப்பை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியும் கெளவுர வமும் அடைகிறேன்.

இந்த சந்திப்பின் போது கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க்க உள்ளார். இதற்கான உங்கள் கேள்விகளை இந்த அறிக்கைக்கு கீழே பதிவுசெய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply