விழுப்புரம் மாவட்டம் மரக் காணத்தில் மாதிரி உப்பு பண்ணையை மத்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம் ஆகிய நகரங்களுக்கு இடங்களுக்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டம் மரக் காணத்தில்தான் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதையொட்டி தமிழகத்தில் தயாரிக்கப்படும் உப்புகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே மூன்றாவது இடமாக மரக் காணத்தில் 35 லட்ச ரூபாய் செலவில் மாதிரி உப்புபண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உப்பு பண்ணையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் தயாரிக்கப்படும் உப்புகள் தரம்குறைந்து உள்ளதாகவும், அதனை தரம் உயர்த்தவும் உப்புதொழில் செய்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கிலும் இந்த மாதிரி உப்பு பண்ணையை துவக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சிறு, குறுதொழில் செய்பவர்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு முத்ராவங்கி திட்டத்தை பிரதமர் துவங்கி வைக்க உள்ளார் , இதன் மூலம் பிணையம் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply