சமையல் எரி வாயு திட்டத்திற்கான நேரடி மானியத்தால், மத்தியஅரசுக்கு 30 விழுக்காடு மானியம் சேமிக்கப் பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மக்களை மையப் படுத்தி ஆட்சி என்ற தலைப்பில் டெல்லியில் நடத்தபட்ட கருத்தரங்கின் நிறைவுவிழாவில் பேசிய அருண்ஜெட்லி, சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தின் மூலம், ஆயிரக் கணக்கான போலி இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசுத்துறைகளில் இருக்கும் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் , அதற்கு ஆதாரமாக விமானத் துறையை சுட்டிக்காட்டினார். இந்திய விமானத் துறையில் அரசின் ஏகபோகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபிறகு, அந்த துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெட்லி தெரிவித்தார்.

ரயில்வே துறையில் அரசின் ஏகபோகம் முடிவுக்கு வராததால், அது போன்ற மாற்றம் நிகழவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஆதாயம் பார்க்க துடிக்கும் அரசியல்வாதிகளின் மனோபாவம் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை என்றும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.

Leave a Reply