பீகார் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தொகுதிபங்கீடு முடிந்தது. பா.ஜ.க 160 இடங்களில் போட்டியிடுவதாக கட்சித்தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்

பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 12–ந் தேதி முதல் நவம்பர் 5–ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, உபேந்திரா குஷாவாவின் ராஷ்டிரிய லோக்சமதா கட்சி, ஜித்தன்ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிபங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடந்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரிந்து வந்த ஜித்தன் ராம் மஞ்சியின் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு மஞ்சி ஒப்புக் கொள்ளாமல் அதிக தொகுதிகள் கேட்டதால் இழுபறி நீடித்தது.

2010–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 75 தொகுதிகளில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி கட்சிக்கு அதிகதொகுதிகள் ஒதுக்குவதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல ராஷ்டிரிய லோக் சமதா கட்சியை விட தங்களுக்கு அதிக இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனால் சில நாட்களாக நீடித்துவந்த பேச்சுவார்த்தை நேற்று முடிவுக்குவந்தது. பா.ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா நேற்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகளை நிருபர்களிடம் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லோக் ஜன சக்தி 40 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக்சமதா 23 தொகுதிகளிலும், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 20 தொகுதிகளிலும் போட்டியி டுகின்றன. அதோடு கூடுதலாக 5 தொகுதிகளில் இந்துஸ் தான் அவாமி மோர்ச்சா பா.ஜனதா சின்னத்தில் போட்டியிடும்.

தேசிய ஜனநாயக கூட்டணி நரேந்திரமோடி தலைமையில் இந்ததேர்தலை சந்திக்கும். 243 தொகுதிகளில் மூன்றில் இரண்டுபங்கு தொகுதிகளில் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் மோடி தலைமையில் இந்ததேர்தலை சந்திக்கிறோம்.

பெரிய கூட்டணி (ஜனதா பரிவார்) ஏற்கனவே பிரிந்து விட்டது. மிகப்பெரிய பந்தத்தில் இருந்து முக்கிய கட்சி (சமாஜ்வாடி கட்சி) வெறியேறி விட்டது. பீகாருக்கு தற்போது இந்த மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக பணிபுரியக் கூடிய ஒரு அரசு தான் தேவை.

பீகார் மக்கள் ஏற்கனவே காங்கிரஸ், ராஷ் டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் என அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இப்போது அவர்கள் தேசியஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குவதற்கான சரியான நேரம் இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.