மின்சார விநியோக நிறுவனங்களின் செயல் பாடுகளை ஆய்வு செய்வதற் காகவும், அந்த நிறுவனங்களின் கடன்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் அவற்றின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

மின்சார விநியோக நிறுவனங்களின் கடன்கள் ஒட்டு மொத்தமாக, ரூ. 3 லட்சம் கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கடும் நிதித்தட்டுப்பாடு காரணமாக, அந்த நிறுவனங்களால் மின்சாரத்தை விலைகொடுத்து வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

மின்சார நிறுவனங்களின் கடன்களை அடைத் தால் மட்டுமே "அனைவருக்கும் மின்சாரம்' என்ற இலக்கை எட்டமுடியும் என்பதால், அந்தக் கடன்களை தீர்ப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், ""மின்சார விநியோக நிறுவனங்களின் செயல் பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும், கடன்கள் அதிகரித்து வருவது குறித்தும் அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்'' என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கும்திட்டம் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும், அதற்கான தீர்வுகளை மாநில அரசுகள் தான் எடுக்கவேண்டும் என்றும் மத்திய எரி சக்தித் துறை அமைச்சர் பியூஷ்கோயல் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

Leave a Reply