இந்தியாவில் முதலீடுசெய்யும் வெளிநாட்டு முதலீட்டா ளர்களுக்கு நியாயமான குறைந்தபட்ச வரிவிதிப்பு இருக்கும். இத்தகைய வாய்ப்பை பயன் படுத்தி இந்தியாவில் முதலீடுசெய்ய அமெரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற 11-வது இந்திய அமெரிக்க பொருளாதார மாநாட்டை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது: அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இதன் மூலம் இரு நாடுகளி டையிலான வர்த்தகம் 50 ஆயிரம் கோடி டாலராக உயரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரமற்ற நிலை நிலவினாலும் இந்தியாவில் அத்தகையசூழல் இல்லை. அதற்கு மக்களின் சேமிப்பு இங்கு வலுவாக இருப்பது ஒருகாரணம் என்று குறிப்பிட்டார். மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துவருவதால் இந்திய அரசு கட்டமைப்பு துறையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது. இந்தவாய்ப்பை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

வெளிப்படையான அதேசமயம் ஏற்கக்கூடிய வரி விதிப்பு முறையை உருவாக்க அரசு மிகுந்த முயற்சிகளை எடுத்துவருகிறது. தொழில் தொடங்குவதில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்கி சுலபமானவழிகளை உருவாக்குவதோடு முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.

இதற்கேற்ப கொள்கைமுடிவுகளை அரசு வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். சாலை கட்டமைப்பு வசதி, துறை முகம், ரயில்வே, சூழல் பாதிப்பில்லா எரி சக்தி துறைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

கலிபோர்னி யாவுக்கு விரைவில் பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் ரிச்சர்ட் வர்மா குறிப்பிட்டார். ஜவஹர்லால் நேருவுக்குப்பிறகு கலிபோர்னியா மாகாணத்துக்கு வரும் இந்தியப் பிரதமர் மோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply