விவேகானந்தா கல்விக்கழகம், மீனாட்சி மகளிர் கல்லூரி, தஞ்சை சாஸ்தா பல்கலைக்கழகம் மற்றும் சமஸ்கிருத பாரதியும் இணைந்து சென்னையில் 3 நாட்கள் சமஸ்கிருத மகா சம்மேளன விழாவை சென்னையில் நடத்தின. கோடம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிறைவுவிழாவில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், பல்வேறு காரணங் களால் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள முடியாமல் போனதற்காக நான் வெட்கபடுகிறேன். சமஸ்கிருதம் படிக்காததால் அந்தமொழியை என்னால் பேச முடியவில்லை. ஆனால் அடுத்து வரும் தலைமுறையானது தங்களின் அறிவை வளர்த்து கொள்வதற்காக பல்வேறுமொழிகளை கற்க வேண்டும் என விரும்புகிறேன்.

கேரளா மற்றும் ஆந்திரமக்கள் இந்தி கற்று கொள்கிறார்கள். ஆனால், எந்தகாரணமும் இன்றி தமிழர்கள் இந்தி படிப்பதை தவிர்ப்பது ஏன் என எனக்கு புரிய வில்லை. சமஸ்கிருதமும் தமிழும் இருகண்கள் போன்றவை. இதில் எது உயர்ந்தது, தாழ்ந்தது என யாராலும் சொல்லமுடியாது. அவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடன் வளர்ச்சி அடைந்தவைகள். கம்பன் தமிழில் எழுதி ராமா யணத்தை படித்து மகிழ்ந்துள்ளேன். அதே அளவு மரியாதையை சமஸ்கிருதத்தில் வால் மீகி எழுதி ராமா யணத்திற்கும் கொடுக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply