உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா விலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு வெளியேறும் அகதிகளுக்கு தங்கள் நாட்டில் இடம்கொடுப்பதற்கு சில நாடுகள் மறுத்து வருகின்றன. இதில் ஐரோப்பிய

நாடுகளை மட்டுமே குற்றம் சாட்டுவது நியாயமல்ல. குவைத், சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளும், மேற்காசிய நாடுகளும்கூட சிரியா அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதில்லை.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் போது அவர்களுக்கு இணையான செல்வ வளமை அரபு நாடுகளிடமும், மேற்காசிய நாடுகளிடமும் உள்ளது.

ஆனால், தங்கள் சொந்தமதத்தினரையே ஏற்பதற்கு ஏதேதோ காரணங்களை கூறி அந்த நாடுகள் தட்டி கழிக்கின்றன. இதனைவிட கீழ்த்தரமான செயல் என்னவாக இருக்க முடியும்?

மனிதநேயத்தை காட்டிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வகுத்துத்தந்த சித்தாந்தமே இந்த நாடுகளுக்கு பெரிதாகத் தெரிகிறது. எனவே, மதத்தின் பெயரால் நடத்தப்படும் அரசியலுக்கு முடிவு கட்ட சர்வதேசக் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

அதே சமயத்தில், காலனி ஆதிக்கத்துக்காகவும், நாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும் தாங்கள் மேற்கொண்ட செயல்களின் பின் விளைவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளும், சிரியா பிரச்னை போன்ற விவகாரங்களும் என்பதை ஐரோப்பிய நாடுகள் மறந்துவிடக்கூடாது

Leave a Reply