நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 17ந் தேதி சிறப்பாகக் கொண்டாட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நம் பிரதமர் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்தாக தபால் நிலையங்களில் 10 ரூபாய் செலுத்தி எளிய முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

வாழ்த்துகள் பிரதமரையும் நாம் அளிக்கும் சிறு தொகை மக்கள் பணிக்காகவும் சென்றடைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம். நான் பாளையங்கோட்டை தபால் நிலையத்தில் தொண்டர்களோடு பிரதமருக்கு இந்த வாழ்த்தை அனுப்புகிறேன். பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் நம் பிரதமர் அவர்களுக்கு வாழ்த்துகளை அனுப்பி மகிழ்வோம். அவர் பல்லாண்டு வாழ நாம் அனுப்பும் வாழ்த்து மக்களை வாழ்த்துவதாகும்.

அடிதட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொடுத்த நம் பிரதமருக்கு நன்றியினைத் தெரிவிக்க அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அதுமட்டுமல்ல பள்ளிக் குழந்தைகள் வாழ்த்து அட்டைகள் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் கைப்பட தயாரித்த வாழ்த்து அட்டைகளை அனுப்பிவைத்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட அட்டைகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு, நம் பிரதமரிடமும் தெரிவிக்கப்படும். நம் பிரதமர் மீது குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு வியக்க வைக்கிறது.

நம் பாரதப் பிரதமரின் காப்பீட்டுத் திட்டங்களையும், முத்ரா வங்கியையும் மக்களிடம் எடுத்துச் செல்வதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் இந்த பிறந்த நாளை மக்களுக்கான சேவை தினமாக நாம் கொண்டாட வேண்டும் எனவும் பாஜக தொண்டர்களைக் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply