இலங்­கை­யா­னது தற்­போ­தைய அர­சியல் தலை­மைத் ­து­வத்தின் திற­மை­யி­னாலும் மக்­களின் ஆத­ர­வி­னாலும் இதய சுத்­தி­யுடன் கூடிய நல்­லி­ணக் ­கத்­தையும், அபி­வி­ருத்­தி­யையும் அடையும் என்று நான் திட­மாக நம்­புகின்றேன் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்தார்.

இலங்­கையின் தமிழ் மக்கள் உள்­ள­டங்­கிய அனைத்து மக்­களும் சமத்­து­வத்­து­டனும் நீதி­யு­டனும் சமா­தா­னத்­து­டனும் கௌர­வத்­து­டனும் ஐக்­கிய இலங்கைக்குள் வாழ்­வார்கள் என்று நான் மிகவும் திட­மாக நம்­பு­கிறேன்

இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் மிகவும் ஆழ­மான பாது­காப்பு ஒத்­து­ழைப்பை நாங்கள் இரு­வரும் மீள் உறு­திப்ப­டுத்திக் கொண்டோம். பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­பதில் எமது ஒத்­து­ழைப்பு தீவி­ரப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் பாது­காப்­புக்­ கா­கவும் எமது கடல் வள ஸ்திரத்­தன்­மைக்­கா­கவும், நாம் இணைந்து செயற்­ப­டுவோம்.

இலங்­கையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசி­யக் ­கட்சி பெற்ற வெற்றி தொடர்பில் நான் மீண்­டு­மொ­ரு­முறை பாராட்­டுக்­களை தெரி­விக்­கின்றேன். இலங்கை பிர­தமர் ரணில்விக்­கி­ர­ம­சிங்க தனது முத­லா­வது வெளி­நாட்டு விஜ­ய­மாக இந்­தி­யாவை தெரிவுசெய்­த­மையை நாங்கள் ஒரு கௌர­வ­மாக கரு­து­கிறோம்.

ரணில் விக்­ர­ம­சிங்க கடந்தமுறை பிர­த­ம­ராக பதவி வகித்தபோது இந்­தி­யாவில் தேசிய ஜன­நா­யக கூட்­டணியே ஆளும் கட்­சி­யாக இந்­தி­யாவில் இருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்க விஷயமாகும் . இலங்கை- இந்­திய உற­வுக்கு அவர் வழங்கும் மிகவும் உறு­தி­யான ஆத­ர­விற்கு நாங்கள் நன்றி தெரி­விக்­கின்றோம்.

ரணில் விக்­ர­ம­சிங்க எமக்கு மிகவும் பெறு­ம­தி­யான ஒரு நண்பர். அவர் இலங்­கையில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்­பதில் காட்டும் அர்ப்­ப­ணிப்பும் அதனை நோக்கிசெல்லும் விதமும் எம்மை ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

இலங்கை மற்றும் இந்­திய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உறவில் இவ்­வ­ரு­ட­மா­னது வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஆண்­டாக காணப்­ப­டு­கின்­றது. கடந்த பெப்­ர­வரி மாதம் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­தி­யா­விற்கு அரசு விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

அதன் பின்னர் நான் கடந்த மார்ச் மாதம் இலங்­கைக்கு விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தேன். தற்­போது இலங்கைப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­விற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருகிறார்.

ஒரேவரு­டத்தில் இலங்­கை­யா­னது இரண்டு தட­வைகள் மாற்­றத்­திற்கும் மறு­சீ­ர­மைப்­பிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்கும் முன்­னேற்­றத்­திற்கும் வாக்­க­ளித்­துள்­ளது.

அது­மட்­டு­மன்றி இலங்­கைக்கு சிறந்த சமா­தானம் மிக்க அனைத்தும் உள்­ள­டங்­கிய சிறந்த எதிர்­காலம் அமைந்­துள்­ளது என்­பதை யாரும் மறுக்கமுடி­யாது. மிகவும் நெருங்­கிய நண்பன் என்ற வகையில் இலங்­கையின் அனைத்து வெற்­றிக்­கா­கவும், நாங்கள் வாழ்த்­து­கின்றோம். இதற்­காக இலங்கை இந்­தி­யாவின் தன்­னி­க­ரற்ற ஆத­ரவை பெற்­றுக்­கொள்ளும்.

இலங்கை அர­சாங்கம் மிக அண்­மைக் ­கா­ல­மாக பல்­வேறு முக்­கிய நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளதை நாங்கள் அறிவோம். எதிர் ­பார்ப்பு மிக்க இந்த கால­கட்­டத்தில் இலங்­கையின் தலை­மைத்­துவம் அர­சியல் ஒற்­று­மையை மிகவும் தீர்க்­க­மான முறையில் வெளிக்­காட்­டி­யுள்­ளது.

இலங்­கை­யா­னது தற்­போ­தைய அர­சியல் தலை­மைத்­து­வத்தின் திற­மை­யி­னாலும் மக்­களின் ஆத­ர­வி­னாலும் இதய சுத்­தி­யுடன் கூடிய நல்­லி­ணக்­கத்­தையும், அபி­வி­ருத்­தி­யையும் அடையும் என்று நான் திட­மாக நம்­பு­கின்றேன். இலங்­கையின் தமிழ் மக்கள் உள்­ள­டங்­கிய அனைத்து மக்­களும் சமத்­து­வத்­து­டனும் நீதி­யு­டனும் சமா­தா­னத்­து­டனும் கௌர­வத்­து­டனும் ஐக்­கிய இலங்­கைக்குள் வாழ்­வார்கள் என்று நான் மிகவும் திட­மாக நம்­பு­கிறேன்.

உங்­க­ளு­டைய முன்­னேற்றம் எமது நாடு­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும் அத்­துடன் சாக் பிராந்­தி­யத்­திற்கும் எமது கடல் பிராந்­தி­யத்­திற்கும் உங்கள் முன்­னேற்றம் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். நானும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், மிகவும் முக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டல்­களை இன்று மேற்­கொண்டோம். கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்­கு­மி­டை­யி­லான உறவில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளதை நாங்கள் வர­வேற்­கின்றோம்.

நமது இரண்டு நாடு­க­ளுக்கும் மிகவும் ஆழ­மான பொரு­ளா­தார ஈடு­பாடு தேவைப்­ப­டு­கி­றது. நமது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான வர்த்­தகம் வளர்ச்­சி­ய­டை­வ­துடன் அது இலங்­கை்கு அதிக நன்­மையை பெற்­றுக்­கொ­டுக்­கக்­கூ­டி­ய­தாக இருப்­பதை காண்­ப­தற்கு நாங்கள் விரும்­பு­கின்றோம்.

இந்த இலக்­கு­களை எவ்­வாறு அடைந்துகொள்­வது என்­பது தொடர்பில் நாங்கள் இரு­வரும் மிகவும் விரி­வாக கலந்­தா­ராய்ந்தோம். அதா­வது மிகவும் திறந்த மட்டும் போட்டித்தன்மை மிக்க இந்­திய சந்­தையில் இந்த இரு­த­ரப்பு ஏற்­பா­டு­களின் ஊடான வர்த்­தகம், மற்றும் முத­லீ­டுகள் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டினோம்.

அது­மட்­டு­மன்றி இந்­திய முத­லீட்­டா­ளர்­களின் ஆத­ரவை நான் இலங்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வி­ட­மி­ருந்து எதிர்­பார்ப்­பாக கூறினேன். இந்­திய முத­லீட்­டா­ளர்கள் இலங்­கையின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, உட்­கட்­ட­மைப்பு, சக்தி வளம் மற்றும் போக்­க­வ­ரத்­து­ து­றையில் அதிக ஆர்வம் காட்­டு­கின்­றனர்.

அந்த வகையில் இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்­கு­மி­டை­யி­லான தொடர்­பு­களை மேலும் பலப்­ப­டுத்­தவும் மனித பொரு­ளா­தா­ரத்தின் தொடர்­பு­களை மேலும் பய­னுள்­ள­தாக உரு­வாக்­கு­வ­தற்கும், இரண்டு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான உறவை பலப்­ப­டுத்­தவும் இந்­தி­யாவின் முழு­மை­யான ஆத­ரவு இருப்­ப­தாக நான் எடுத்­துக்­கூ­றினேன்.

இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உட்­கட்­ட­மைப்பு, ரயில்வே, சக்­தி­வளம், சமூக அபி­வி­ருத்தி, விவ­சாயம், ஆளு­மையைக் கட்­டி­யெ­ழுப்­புதல், விஞ்­ஞானம், மற்றும் தொழில்­நுட்பம் சிவில், அணு­சக்தித் துறை ஆகி­ய­வற்றில் நாங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தாக இலங்கைப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் நான் எடுத்­துக்­கூ­றினேன்.

இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான மக்கள்- மக்கள் தொடர்பை பலப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் தொடர்ந்து அர்ப்­ப­ணிப்­புடன் இருப்போம். இலங்­கையும் இந்­தி­யாவும் மிக அண்­மை­யி­லேயே டெஸ்ட் கிரிக்கட் தொடரை நிறைவு செய்­தது. நாம் அனை­வரும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் குமார சங்­க­கா­ரவை கிரிக்கட் களத்தில் இருந்து இழக்­கின்றோம்.

இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் மிக நெருக்­க­மான பாது­காப்பு அக்­க­றையும், உணர்­வு­பூர்வ தேவையும் காணப்­ப­டு­வ­தையும் நாங்கள் இரு­வரும் அங்­கீ­க­ரிக்­கிறோம். இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் மிகவும் ஆழ­மான பாது­காப்பு ஒத்­து­ழைப்பை நாங்கள் இரு­வரும் மீள் உறு­திப்­ப­டுத்திக் கொண்டோம்.

இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்­கு­மான மீனவர் விவ­காரம் தொடர்­பா­கவும் நானும் இலங்கைப் பிர­த­மரும், விரி­வாக ஆராய்ந்தோம். அதா­வது இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான மீனவர் சங்­கங்கள் இந்த விஷயம் தொடர்பில் பேச்சு நடத்தி தீர்வைக்காண வேண்­டு­மென நாம் ஒரு உடன்பாட்டுக்கு வந்தோம். மீனவர் விவகாரம் ஒரு மனிதாபிமானப் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாக பார்க்கப்படவேண்டுமென இலங்கைப் பிரதமருக்கு எடுத்துக் கூறினேன்.

அத்துடன் இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட வேண்டுமென்பதை நாங்கள் ஊக்குவிப்பதாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு நான் எடுத்துக்கூறினேன்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.