பீகார் மாநில சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க. 160 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான லோக் ஜன சக்தி (ராம்விலாஸ் பஸ்வான் கட்சி) 40, ராஷ்டிரிய லோக்சமதா 23, மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பாஜக. தனது முதல்வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்டது. அதில் 43 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மூத்த தலைவர் ஜே.பி.நட்டா பட்டியலை வெளியிட்டார். முன்னதாக பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் , கட்சித் தலைவர் அமித்ஷா, ராஜ்நாத்சிங், அனந்த குமார், நிதின் கட்காரி, சுஷில் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:

Leave a Reply