இலங்கை போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்ட பேரவையின் தீர்மானம் மீது மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை யொட்டி, சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பொன் ராதாகிருஷ்ணன், இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை மத்தியஅரசு உறுதிசெய்யும். சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்ட மன்றத்தின் தீர்மானம் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply