1970, 80-களில் நடந்ததைபோன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளை வீணடித்து விட்டார். இப்போது பிரதமர் அலுவலகம் முடிவு எடுப்பதைபோல அவரது ஆட்சிக் காலத்தில் முடிவுகள் எடுக்கப்பட வில்லை என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது பற்றி, டெல்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் அவர் பேசியதாவது

மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு வெளியில்இருந்து எந்த நெருக்கடியும், தலையீடும் இல்லை. முடிவுகள் எடுக்கப்படும் போது பிரதமரின் வார்த்தையே இறுதியானது. அரசோ அல்லது நிதிமந்திரியோ அல்லது மற்ற மந்திரிகளோ முக்கிய சீர்திருத்தங்கள், முடிவுகளில் தலையி்ட முடியாது. நாங்கள் கூட்டணி அரசாகஇருந்தாலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒருபெரும்பான்மை அரசை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். முடிவுகள் எடுப்பதில் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் பிரதமர் அலுவலகம் நடந்துகொள்கிறது. இந்தியாவை பொருளாதார ரீதியில் முன்னேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு தெளிவாக எடுத்துவருகிறது இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Leave a Reply