1965-ல் பாகிஸ்தா னுடனான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு டெல்லியில் உள்ள அமர் ஜவான்ஜோதி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளுடன் மரியாதை செலுத்தினார்.

1965-ல் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் படைகள் நுழைந்ததால் போர்மூண்டது. காஷ்மீருக்கு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடிகொடுத்தது. ஜெய் ஜவான்-ஜெய் கிஸான் என்ற முழக்கத்துடன் இந்தியப் படைகள் போரில் ஈடுபட்டன. நாடுமுழுவதும் இந்த முழக்கம் எதிரொலித்து, எல்லையில் போராடிய வீரர்களுக்கு உத்வேகம் அளித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதிக அளவில் பீரங்கி டாங்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்தப்போரில் இந்தியப் படைகள் வேகமாக முன்னேறின. பாகிஸ்தான் படையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஏப்ரல் 1965 முதல் செப்டம்பர் 1965வரை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இப்போர் நடைபெற்றது. காஷ்மீர் குறித்து உருவான இரண்டாவது காஷ்மீர்போர் இதுவாகும். பாகிஸ்தானுடன் 1965-ம் ஆண்டு நடந்தபோரில் இந்தியா வெற்றிவாகை சூடியது. இதன் பொன் விழாவையொட்டி தலைநகரில் ஒரு கண் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான இப்போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு டெல்லியில்உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி முப்படை தளபதிகளுடன் மரியாதை செலுத்தினார்.

Tags:

Leave a Reply