அமெரிக்க சுற்றுப் பயணத்திற்கு பிறகே, அடுத்த கட்டபிரசாரத்தை, பிரதமர் துவங்கவுள்ளார். பீகார் தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், பாஜக.,வின் தேர்தல் பிரசாரம் எப்படியிருக்கும் என்பது குறித்த எதிர் பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன், பீகாரில் நான்குமுறை பிரசாரம் செய்துவிட்டார், மோடி. நாளை, அமெரிக்கா புறப்பட்டு செல்லும் மோடி, சுற்றுப்பயணத்தை முடித்து வந்த பிறகு, பீகார் செல்லவுள்ளார். அப்போது, 12 இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டமும், 20 தொகுதிகளை உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது. 20 தொகுதிகளின் வேட்பாளர்களும், ஒரேயிடத்தில் மேடையேற்றப்பட்டு, அவர்களுக்காக பிரதமர் ஓட்டுசேகரிப்பார்.

பாஜக., வேட்பாளர்கள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளான, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக்சமதா ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், பிரதமர் தேர்தல் பிரசாரம்செய்ய திட்டமிட்டிருப்பதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply