''முந்தைய அரசுகளுக்கு வருண பகவானின் கருணை இருந்தது போல், எங்கள் அரசுக்கு இல்லை,'' சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக, எங்கள் நாட்டு முதலீட்டாளர்கள் பாதிப்படைந்துள்ளதால், தனியார்முதலீடு பெருகவில்லை. அதேநேரத்தில், வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது.

சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. எனினும், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், அந்த மசோதா நிறைவேறும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. அதையடுத்து, 2016 ஏப்ரலில் அந்த சட்டம் அமலாகும்.சரக்கு மற்றும் சேவைவரி, பிற வரிச் சட்டங்கள் போல, ஏப்., 1ல் தான் அமல்படுத்த வேண்டும்; இல்லையேல், அடுத்த நிதியாண்டின் ஏப்., 1ல் தான் மீண்டும் அமலாகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது, பரிவர்த்தனை வரி என்பதால், எந்த மாதத்திலும் தேதியிலும் அமலாகும்.

எனவே, எந்த தேதியில் பார்லிமென்டில் நிறைவேற்றப் பட்டாலும், அடுத்த, 1ம் தேதி முதல் அந்தசட்டம் அமலாக வாய்ப்பு உள்ளது.நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை நடப்பு நிதியாண்டில் தனியார்மயமாக்கி, 69 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதில் உறுதியாக உள்ளோம். எல்ஐசி.,யில் இருந்து கிடைக்கும் நிதியால், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி தள்ளிபோகிறது என்பதில் உண்மையில்லை.

முந்தைய அரசுகளுக்கு வருண பகவான் கருணை காட்டியது போல, கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் அரசுக்கு கருணை காட்டவில்லை; போதுமான மழை இல்லாததால், விவசாய உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. எங்கள் நாட்டில், 55 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளதால், போதிய பருவ மழை இல்லாதது கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.எனினும், விவசாய துறை உட்பட, அனைத்து துறைகளிலும் முதலீட்டுவாய்ப்பு சிறப்பாக உள்ளது.

இன்டர்நேஷனல் பைனான்ஷியல் சென்டர்' அரங்கில், ஹாங்காங் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி  அழைப்பு விடுத்து பேசியது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.