இணைய குற்றங்களை தடுக்க அதிநவீன அமைப்பை ஏற்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டு வருகிறது. சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை தடுப்பதற்கான வழிகள்குறித்து ஆராய மத்திய அரசு சார்பில் நிபுணர்குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படவேண்டும். குறிப்பாக இணைய குற்றங்கள் களையப்பட வேண்டும். குழந்தைகள், பெண்களின் ஆபாசபடங்கள், தகவல்களுடன் இணைய தளங்கள் உள்ளனவா என தொடர்ந்து கண் காணிப்பதுடன் அவை உடனுக்குடன் முடக்கப்படவும் வேண்டும்.

இதற்கு தொடர் புடைய சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். இணையத்தில் குழந்தைகளின் செயல் பாடுகளை கண்காணிக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இக் குழு அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த பரிந்துரைகளை விரைந்து செயல் படுத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார். இந்திய இணைய குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (ஐசி4) என்ற பெயரில் ரூ.400 கோடி செலவில் அதி நவீன இணைய குற்றங்கள் தடுப்பு மையத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது என்றார்.

Leave a Reply