தமிழகத்தில் உள்ள 214 இஎஸ்ஐ கிளினிக்குகள், 6 படுக்கை கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் இந்த மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. அதனால், இந்த கல்லூரி மூடப்படாது. கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை தமிழகஅரசிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 214 இ.எஸ்.ஐ கிளினிக்குகள், 6 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். நாடுமுழுவதும் இஎஸ்ஐ மருத்துவ மனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பு, எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடிஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்காக மற்ற அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதுபோன்ற வசதியில்லாத இஎஸ்ஐ மருத்துவ மனைகளில் விரைவில் ரத்த சுத்திகரிப்பு கருவி, எம்.ஆ.ர்.ஐ ஸ்கேன், சிடிஸ்கேன் அமைக்கப்படும்.

இஎஸ்ஐ மருத்துவ மனைகளில் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கைமருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) மருத்துவ பிரிவு தொடங்கப்படும். இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட்கார்டு வழங்கும் பணி, வரும் ஜனவரி முதல்வாரத்தில் தொடங்கும். தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தம் செய்யப்படும்

சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பண்டாரு தத்தாத்ரேயா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது

Leave a Reply