விஷ்ணுபிரியா அவர்களின் உயிரிழப்பு பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறது. அவரின் உயிரிழப்பு முழுமையாக விசாரிக்கப்பட்டு அவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது முக்கியம். அதே நேரத்தில் ஒவ்வொரு உயிரிழப்புகளுக்கும் CBCID

போதுமா CBI வேண்டுமா? என்று விவாதங் பொருளாகி சில நாட்கள் உரக்க பேசப்பட்டு அடுத்த சம்பவம் நடைபெறும் வரை மறக்கப்பட்டு மறுபடியும் விவாதப் பொருளாக மாற்றப்படும் என்ற நிலையிலேயே ஒவ்வொரு சம்பவமும் சென்று கொண்டிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

ஒரு இழப்பு அத்தகைய மற்ற இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவே அமைய வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளின் தற்கொலை எண்ணிக்கை 300 ஐத் தொட்டு இந்தியாவிலேயே 2வது இடத்தைப்பிடித்துள்ளது. இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. தமிழகத்தில் ஏதோ நேர்மையாக இருப்பதே இயலாத காரியம் என்பது போலவும் நேர்மையானவர்கள் அனைவரும் பரிதவித்துத்தான் கடமையாற்ற வேண்டும் என்பதும் போலவும், இல்லையென்றால் பரிவைத் தேடும் அளவு உயிரிழக்க நேரிடும் என்பது போலவும் ஒரு தோற்றம் நிலவுகிறது.

குறிப்பாக பெண் அதிகாரிகள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் பணியின் காரணமாக வெளிப்படை தன்மையோடு விவாதிக்க இயலாத நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதேபோல் பொதுகலவரங்களில் கூட தங்களின் தன்மான உணர்வுகள் இடற்படுத்தப்பட்டு அவமானத்திற்கு உள்ளாகிறார்கள். மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். நியாயம் கிடைப்பது கூட பாரபட்சமாகவே நடைபெறுகிறது. உதாரணம் சமீபத்தில் நடந்த ஆம்ப+ர் கலவரம். இது தொடர்கதையாகிக் கொண்டே போகிறது. சில நேரங்களில் ஆண் காவலர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

அதனால் பல முறை மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காவல் நல சங்கங்கள், சில கட்டுப்பாடுகளுடன் நடைமுறைபடுத்தினால் கூட சரியாக இருக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது. தற்போது பெண் காவல் அதிகாரிகள் மனதளவில் தங்களது அழுத்தத்தையும், பாதிப்புகளையும் பகிர்ந்து கொண்டு அவை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகும். இல்லையென்றால் காக்கி சட்டைக்குகள் கனிவான இதயங்கள் கனமான இதயங்களாக மாறி கயிற்றில் தொங்கும் இதயங்களாக மாறிவிடுகின்றன.
அதனால் அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகளை உண்மையாக உள்வாங்கி வழிகாட்டும் ஒரு குழு அமைக்கப்படுவது நலம் என கருதுகிறேன்.

ஒய்வு பெற்ற பெண் நீதிபதி, உயர் பெண் காவல்துறை அதிகாரி, பெண்கள் நல மருத்துவர், மனநல மருத்துவர், இவர்களை போன்றவர்களை இணைத்து ஒரு குழு அமைத்து வழிகாட்டினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வரும் என்றும், தொல்லைகள் எல்லை மீறி போகாது எனவும், மன அழுத்தத்திற்கு வடிகால் கிடைக்கும் என்பதும், அதன் மூலம் அவர்கள் பணியாற்ற வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதும் எனது கருத்தாக இருக்கிறது.

தமிழக அரசு CBCID விசாரணை போதுமென்று அறிவித்துள்ளது. ஆனால் அதிலும் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதும் முழுமையான விசாரணை முடிவடையாத வழக்குகள் பல உள்ளன என்பது யாவரும் அறிந்ததே.

ஏதோ CBI வேண்டாம் என்று சொல்வதன் மூலம் உண்மைகள்; மறைக்கப்படுகின்றனவா என்ற நிலை உருவாவதும் சரியல்லை.

அதனால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு விசாரணை முழுமையாக நடத்தபட்டு, உண்மைகளை வெளியிடுவது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

விஷ்ணுப்பிரியா போன்ற நல்ல அறிவாற்றல் மிகுந்த நேர்மையான இளம் பெண் அதிகாரிகள் இன்னும் அதிக அளவில் திறமையாக எந்த தடையுமின்றி பணியாற்றுவதற்கு விஷ்ணுப்பிரியாவின் உயிர் தியாகம் வழிகாட்டுதலாக அமையட்டும்.

ஊடீஐ விசாரணை அறிவிப்பதோடு, ஒருவழிகாட்டுதல் குழுவை அமைத்து அரசாங்கம் நடைமுறை படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதனை வலியுறுத்தி பாஜக மாநில இளைஞர் அணி சார்பில் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் 26-ந்Nதி காலை 11 மணிக்கு நடைபெறும்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply