ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து அமைச்சர் நிதின்கட்காரி இதனை கூறினார். சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இத்திட்டத்தை நிறைவேற்ற 6 யோசனைகளை பரிந்துரைத்துள்ளது என்றார். ராமர் பாலத்திற்கு சேதம் எதுவும் ஏற்படாமல் திட்டம் செயல்படுத்தபடும் என்ற கட்காரி இதற்கான முடிவை பிரதமர் மோடி விரைவில் எடுப்பார் என்று கூறினார்.

சென்னை ,தூத்துக்குடி உள்ளிட்ட நாட்டின் 12 பெரிய துறை முகங்களை சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். துறைமுகங்களில் மின்சாரதேவையை பூர்த்திசெய்ய சூரிய மின்சக்தி திட்டம் அறிமுகப்படுத்தபடும் என்ற கட்காரி சென்னை, தூத்துக்குடி துறை முகங்களில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குளைச்சல் துறைமுகத்திற்கான திட்ட அறிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் முறைப்படி பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பிட்ட கட்காரி சர்வதேசளவில் மிகபெரிய துறைமுகமாக உருவாக்கப்படும் என்றார். ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி இடையிலான பங்கிங்காம் கால்வாயில் நீர் வழி போக்குவரத்தை உருவாக்கும் திட்டத்துக்கான நிலம் கையகப் படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கட்காரி கூறினார்.

Leave a Reply