வாசன் கண் மருத்துவமனையை டாக்டர் அருண் முதன் முதலில் திருச்சியில் ஆரம்பித்தது 2002 இல். 2008 வரை ஒரு மாதிரியாக ஈ ஓட்டி ஹாஸ்பிடல் தான் அது. அதன் அதிகப்படியான டர்ன் ஓவர் 13 கோடி மட்டுமே.

திடீரென்று நம்ம ‪#‎கார்த்திக்_சிதம்பரத்தின்‬ கண் திருஷ்டி அதன் மேல் பட்டது. உடனே ஏறுமுகம் தான். அதாவது வாசன் நிறுவனத்தின் மீது கார்த்திக் சிதம்பரத்தின் பார்வை பட்ட சில நாட்களிலேயே, அதாவது 90 நாள்களில் மோரிஷியஸ் நாட்டு தொழிலதிபர் திடீர்னு மூக்கு வேர்த்து ஒரு 50 கோடியை வாசன் குழுமத்தில் முதலீடு செய்தார். பிறகு அதே தொழிலதிபர் மீண்டும் ஒரு 50 கோடி ஒரே வருடத்தில் முதலீடு. அதன் பிறகு வாசனின் கிளைகள் சென்னையிலும் பரவ ஆரம்பித்தன. இந்தக் குழுமத்தின் TURN OVER ஓராண்டில் 20 மடங்கும், மூன்று ஆண்டுகளில் 38 மடங்காகவும் உயர்ந்தது.

2008 இல் 25 கிளைகள். 2012 -13 ஆண்டில் 175 கிளைகள். இந்த நிறுவனத்தில் மொத்தம் 200 கண் மருத்துவர்கள். ஊழியர்கள் 8000 க்கும் அதிகம்.

இந்த அபரிமிதமான வளர்ச்சியின் பின்புலம் J.D குழுமம்.

அதிலிருந்து ரூபாய் 223 கோடி சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. 19.22 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடந்திருக்கிறது. ஆனால் வருமான வரித்துறை வாயைத் திறக்காமல், கண்ணை முழிக்காமல் அத்தனை ஆதாரங்களையும் வைத்துக்கொண்டு அமைதி காக்கிறது.

 காரணம் ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் அதே தானே…… கர்த்தா – முன்னாள் நிதி அமைச்சரும் அவரின் வாரிசும்…….

ஜே.டி குழுமம் என்றொரு நிறுவனம். அதன் உரிமையாளர் J.தினகரன்.
இந்த நிறுவனம் சட்ட விரோதமாக ஏலச் சீட்டு நடத்தி அதனால் கறுப்புப் பணத்தில் புழங்குவதாகக் கூறப்படுகிறது. 2014 இல் JD நிறுவனங்களில் வருமானவரித் துறை அதிரடி சோதனை நடத்தியது. (மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு).

இந்த JD குழுமம், வாசன் கண் மருத்துவமனைக்கு இது வரை ரூ 223 கோடி பணப்பரிவர்த்தனை நடத்தியதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இந்த சோதனைக்கு மூலக் காரணமாக இருந்த சென்னை மத்திய பகுதியின் வருமானவரித் துறை ஆணையர் ஸ்ரீனிவாச ராவ் திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஜூன் 26 2015 இல் மத்திய தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ். இதன் மூலக்காரணம் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் இவர்களின் விசுவாசியான மற்ற அதிகாரிகளின் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரு ஸ்ரீனிவாச ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் JD குழுமத்திடமிருந்து கறுப்புப் பணத்தைப் பெற்ற அரசியல்வாதி என்று தன் மனுவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

10 ஆண்டு கால UPA ஆட்சியில் 7 வருடம் நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். வருமானவரித் துறையும் இவரது துறையின் கீழ்தான் இருந்தது. அவரால் அமர்த்தப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட, உயர்பதவி அடைந்த பல விசுவாசிகள் இப்பொழுது ராவைப் பழிவாங்க முற்பட்டுள்ளனர் என்பது ஸ்ரீவாச ராவின் வாதம்.

வாசன் குழுமத்திற்குப் பின்னணி (????) இலிருந்து செயல்பட்டு வருபவர்கள் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம். இதில் JD குழுமமும், வாசன் குழுமத்தின் டாக்டர் A.M அருண் ஆகியவர்கள் உள்ளனர்.

வாசன் கண் மருத்துவமனை அதிபர் டாக்டர் AM அருண், அவரது மனைவி மீரா அருண் இருவருக்கும் ரூ 100 மதிப்புள்ள பங்குகள் ஒவ்வொன்றும் ரூ100 ப்ரீமியம் விலையில் 27 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதே ப்ரீமியம் மதிப்பில் 3 லட்சம் பங்குகள் V துவாரகநாதன் என்பவருக்கும் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதாவது ரூ 100 மதிப்புள்ள பங்குகள் ரூ 200 க்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பங்குகளை வாங்கிய 48 மணி நேரத்திலேயே திரு துவாரகநாதன் 1.5 லட்சம் பங்குகளை (Advantage Starargic Consulting (P) Ltd ) அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்டிங் (பி) லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு பாதி விலையில் அதாவது 1.55 கோடி ரூபாய் நஷ்டத்தில் குறைந்த விலையில் கொடுத்திருக்கிறார். இது ஏன்?……..
அல்லது வாசன் கண் மருத்துவமனை நஷ்டத்தில் இயங்குகிறதா? ……. இதில் வேடிக்கை என்னவென்றால், வாசன் கண் மருத்துவமனை அசுர வளர்ச்சி அடைந்த காலம் அது என்பதாகும்.

மேலும் திரு.ராவ் அழுத்தம் திருத்தமாக மௌரீஷியஸ், சிங்கப்பூரிலுள்ள முன்னணி நிறுவனங்களின் உதவியுடன் கார்த்திக் சிதம்பரம், வாசன் கண் மருத்துவமனையை வாங்கியுள்ளார் என்று கூறியுள்ளார். அத்துடன் திரு.துவாரக நாதன் 1.5 லட்சம் பங்குகளை மாற்றிய கம்பெனியின் 2/3 பங்குகள் அஸ்பிரிட்ஜ் ஹோஸ்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திருவாளர் கார்த்திக் சிதம்பரம். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் கைகள் மூக்கை சுற்றிக் கொண்டு தொடுகிறது என்று……

2009 ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை UPA ஆட்சியில் இருந்த காலத்தில் வாசன் குழும நிறுவனம், தனது முதலீட்டை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது பங்கு வெளியீடு மூலம் ரூ 230 கோடியும், கடன்கள் மூலம் ரூ 460 கோடியும் திரட்டியுள்ளது. 2009 இல் ரூபாய் 16 கொடியாக இருந்த TURN OVER பணம் 2010-11 இல் ரூ 311 கோடியாகவும் 2011-12 இல் ரூ. 462 கோடியாகவும் 2012-13 இல் ரூ 604 கோடியாகவும் மளமளவென அசுரகதியில் அதிகரித்துள்ளது. மொத்தம் மூன்று ஆண்டுகளில் 38 மடங்காக உயர்ந்துள்ளது.

இப்போது புரிகிறதா? 2009 இல் சாதாரணமாக இருந்த வாசன் நிறுவனம்
"நாங்க இருக்கோம்", "நாங்க இருக்கோம்" ன்னு சொன்னதை நாம தான்
தப்பா புரிஞ்சுண்டு இருக்கோங்கறது……. அவங்க அவர்கள் ரொம்ப ஸ்டிராங்கா இருக்கேன்னு சொல்லி இருக்காங்க……..

2014 ஆம் ஆண்டு UPA அரசு முடியும் தருவாயில் பல கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது இந்தக் குழுமம்.

இன்றைய வாசன் குழுமத்தின் மதிப்பு 5500 கோடி இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.