ஆனைகட்டி ஆர்ஷவித்யா குருகுல ஆசிரம தலைவர் தயானந்த சரசுவதி சுவாமிகள் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) ரிஷிகேஷத்தில் உள்ள ஆசிரமத்தில் நடக்கிறது. தயானந்த சரஸ்வதியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

கோவை ஆனை கட்டியில் பிரசித்திபெற்ற ஆர்ஷ வித்யா குரு குல ஆசிரமம் உள்ளது. இதனை நிறுவி நடத்திவந்தவர் பிரபல சுவாமி தயானந்த சரசுவதி. இவர் ஆன்மிக பணி, சமுதாய பணிகளில் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர்.

இதனால் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அன்பை பெற்றவராக விளங்கினார். அவர் இமயமலை அடிவாரத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் நேற்று இரவு 10.20 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இதனால் ஆனைகட்டியில் உள்ள ஆசிரமம் சோகத்தில் மூழ்கியது.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது:

" சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எனக்கு சொந்த முறையில் பேரிழப்பாகும். அவருடைய ஆத்மா அமைதி பெற பிரார்த்திக்கிறேன். அவரால் ஊக்கம்பெற்ற கோடானகோடி மக்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். அறிவு, ஆன்மிகம் மற்றும் சேவை உணர்வுகளின் மகா சக்தியாக அவர் விளங்கினார். "

இவ்வாறு மோடி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply