முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கோரிக்கையை ஏற்றுத் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு அமெரிக்கா விசாவழங்க மறுத்தது என்று பிரபல பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்த போது மோடிக்கு அமெரிக்க அரசு விசாவழங்க மறுத்து வந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பலதரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பல்ல, அமெரிக்க அரசின்முடிவு இது என்று அப்போதைய மத்திய அரசு கூறிவந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது ஜெகதீஷ் பகவதி கூறியதாவது , இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வேண்டுகோளின் பேரிலேயே மோடிக்கு விசாவழங்க மறுத்தது அமெரிக்க அரசு. இது மோடிக்குமேகூட தெரியும். ஆனால் அதை அவர் பெரிதுபடுத்த விரும்ப வில்லை. அவர் மிகவும் எதார்த்தமான ,. பிராக்டிகலான மனிதர்.

மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவுக்கு மன்மோகன்சிங் தலைமையிலான அரசு வலிக்காத மாதிரியே கண்டனம் தெரிவித்தது. சீரியஸான கண்டனமாக அவர்கள் தெரிவிக்கவில்லை. ஒப்புக்கு கண்டனம்தெரிவித்து நிறுத்தி கொண்டனர். இந்திய அரசு கேட்டு கொண்டதற்கு அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்தது, அவ்வளவு தான் என்றார் பகவதி.

Leave a Reply