பிகார் பேரவை தேர்தலுக்கான பாஜக.,வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சத்ருகன் சின்ஹா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பிரசாரத்தில் ஈடுபடும் பிரபல ங்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட கட்சிகள் அளிப்பதுவழக்கம். அதன்படி பிகார் பேரவைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ள பாஜக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதில், மொத்தம் 40 பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும், பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் அப்பட்டியலில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோரும் பிகார் தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

Tags:

Leave a Reply