சிறு தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் எளிதாக கடன்பெறும் முத்ரா திட்டம் குறித்த விழிப் புணர்வு வாரத்தை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று தொடங்குகிறார்.

டெல்லியில் பஞ்சாப்நேஷனல் வங்கியின் சார்பில் நடைபெறும் முகாமில் தொழில் முனைவோர் சிலருக்கு கடனுக்கான கடிதத்தை ஜெட்லி வழங்க உள்ளார். நாடுமுழுவதும் சிறுதொழில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், முத்ராகடன் விழிப்புணர்வு வாரம் இன்று முதல் அக்டோபர் 2ம் தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது.

வங்கிகள் சார்பில் முத்ராகடன் திட்ட பரப்புரை முகாம்கள் நடை பெறவுள்ளன. நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் ஒருலட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் சிறு கடன் வழங்க பொதுத்துறை, தனியார் மற்றும் மண்டல கிராமவங்கிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. சிறு தொழில் வளர்ச்சி வங்கியான Sidbiயின் துணை அமைப்பாக முத்ரா நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் ஆரம்ப முதலீடாக 5 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

அதன் மூலமாக வங்கிகள் சிறுதொழில் முனைவோருக்கு அதிகபட்சம் 10 லட்ச ரூபாய்வரை கடன் வழங்கவுள்ளன.

Leave a Reply