உலகவங்கி நிர்வாக இயக்குநர் முல்யானி இந்திராவதி மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசினார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உலகவங்கியின் நிர்வாக இயக்குநர் இந்திராவதி, பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்துபேசி வருகிறார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தார்.

உலகவங்கிக்கும், இந்தியாவிற்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள்குறித்தும், தற்போது செயல்பாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

முன்னதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்துபேசிய அவர், ரயில்வே உள்கட்டமைப்பினை மேம்படுத்த அனைத்து உதவிகளை வழங்கதயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். கடந்த ஜூலை 2014ம் ஆண்டு முதல் ஜூன் 2015 வரை 380 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளது.

Leave a Reply